ஹைதராபாத்:அர்ஜூன் என்ற 35 வயது இளைஞர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டை வாங்கியுள்ளார். பிரபல நிறுவனத்தில் பணியாற்றும் அர்ஜூன் மாதம் ரூ. 1 லட்சம் சம்பாதிக்கிறார். அவர் வீட்டுக் கடனுக்கு மாதம் 40,000 ரூபாயும் கார் கடனுக்கு 15,000 ரூபாயும் செலுத்தி வந்துள்ளார்.
இதனையடுத்து சில தனியார் நிறுவனங்களின் தனிநபர் கடன் அதிகமாக வாங்கியதால், அவரது மாத வருமானம் அனைத்தும் கடனுக்கு செலாவகியுள்ளது. திடீரென்று, அர்ஜூன் மாதச் செலவுகளைச் சமாளிக்கப் பணத்திற்காக மிகவும் சிரமப்பட்ட சமயத்தில், கடன்களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தத் தவறியதால், கடன் வழங்குநர்களிடமிருந்து அழுத்தம் அதிகரித்தது.
தற்போது நாடு முழுவதும் பலரும் அர்ஜூனைப்போலவே, பலர் இதுபோன்ற நிதி நெருக்கடிகளில் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து வெளியே வர வழி தெரியாமல் சிரமப்படுகின்றனர். இதற்கெல்லாம் காரணம் கிடைக்கும் ஒவ்வொரு கடனையும் அவர்கள் பெறுகிறார்கள். வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையைப் புறக்கணிப்பதே, இந்த தவிர்க்கக்கூடிய பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம். ஒருமுறை நிதி தொடர்பான திட்டமிடுதலில் தவறு செய்து விட்டால், மீண்டும் வலுவான நிலைக்கு வருவது மிகவும் கடினமாகும்.
தொல்லையில் முடியும் தனிநபர் கடன்கள்: கடன் வாங்குவது எளிது. ஆனால் அதற்கு முன் சிறிய தியாகங்களைச் செய்ய நாம் தயாராக வேண்டும். சம்பளம், தவணைத்தொகை, வட்டி மற்றும் பிற செலவு ஆகியவற்றிற்கும், வருமானத்திற்கு இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.
தேவைகள், ஆசைகள் மற்றும் ஆடம்பரங்கள் ஆகியவைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். நம் ஆசைகளை தள்ளிப்போட வேண்டும். ஒருவரின் நிதித்திறனுக்கு மேலான ஆடம்பரங்கள் கடன் பெறுவதற்கு வழிவகை செய்கிறது. கடனைப்பெறுவதற்கு முன், முந்தைய கடன்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து முழுமையாகச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். 10 விழுக்காட்டிற்கு மேல் அதிக வட்டியில் கடன் வாங்குவது நீண்ட கால சுமையாக மாற வாய்ப்புள்ளது.
ஏற்கெனவே செலுத்த முடியாத கடன்கள் கையில் இருந்தால் அதனை கட்டி முடித்த பின்னரே மற்ற கடன் வாங்க வேண்டும். மேலும் முதலில் வருமானத்தில் கடனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதாவது சரியான நேரத்தில் தவணை செலுத்துவதற்காக தேவையற்ற செலவுகளைக் குறைப்பது, வங்கி டெபாசிட்கள், ஈக்விட்டிகள், பரஸ்பர நிதிகள் மற்றும் பிறருக்கு வழங்கப்படும் கடன்களில் இருந்து எவ்வளவு தொகையை எடுக்கலாம் என்பது பற்றிய தெளிவான புரிதல் ஆகியவை இருத்தல் அவசியம்.
கடனை வாங்குவதற்கு முன் அதை திருப்பிச் செலுத்த ஒரு செயல் திட்டம் தேவை. 10 விழுக்காடு வட்டிக்கு மேல் உள்ள கடன்களை முன்னுரிமை அடிப்படையில் உடனே திருப்பிச்செலுத்த வேண்டும். யாரோ கொடுக்கிறார்கள் என்பதற்காக கடன் வாங்கக்கூடாது. இது உங்கள் வருமானம் மற்றும் கடனை திருப்பிச்செலுத்துவதற்கான வரம்புகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். கடன் வாங்கும் போது இந்த முன்னெச்சரிக்கைகள் அவசியம்.
எந்தெந்த கடன்கள் எத்தனை சதவீதம்?வீட்டுக்கடன் தவணைகள் உங்கள் நிதித் திறனில் 40 விழுக்காட்டிற்கு மேல் போகக்கூடாது. கிரெடிட் கார்டு உங்கள் வரம்பில் 12 விழுக்காட்டிற்கு மேல் பயன்படுத்தக்கூடாது. கார் கடன்கள் ஐந்து விழுக்காட்டிற்கு மேல் இருக்கக்கூடாது.
தனிநபர் கடன்கள் உங்கள் வருமானத்தில் இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவாக இருக்க வேண்டும். நல்ல கடன்கள் சொத்துகளை உருவாக்குகின்றன. ஆனால், நம் தேவைக்கு மீறி செலவழித்தால் அவை மோசமான கடனாக மாறும்.
அதிக வட்டிக்கு கடன் வாங்கி ஒருவர் நன்றாக முதலீடு செய்தாலும், அவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்காது.
இதையும் படிங்க:சினிமா பாணியில் கடன் வசூலிக்க முயன்ற ஆறு பேர் கைது