ETV Bharat / bharat

நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் ஜூலை 20ல் தொடக்கம்... பொது சிவில் சட்ட மசோதா தாக்கலா?

ஜூலை 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் நடைபெறும் என மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார்.

Parilament
Parilament
author img

By

Published : Jul 1, 2023, 3:03 PM IST

டெல்லி : நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் வைத்து நடைபெறும் என அவர் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் 28ஆம் தேதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்த நிலையில், முதல் முறையாக அங்கு மழைக் கால கூட்டத் தொடர் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தன் ட்விட்டர் பதிவில், "2023ம் ஆண்டுக்கான மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும். இந்த கூட்டத் தொடரின் போது கொண்டு வரப்பட உள்ள சட்டங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளில் அனைத்துக் கட்சிகளும் ஆக்கப்பூர்வ பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என தெரிவித்து உள்ளார்.

  • Monsoon Session, 2023 of Parliament will commence from 20th July and continue till 11th August. Urge all parties to contribute towards productive discussions on Legislative Business and other items during the #MonsoonSession.

    — Pralhad Joshi (@JoshiPralhad) July 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை உள்ள 23 நாட்களில் 17 நாட்கள் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. . இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தொடங்கி பின்னர் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம், டெல்லி அவசரச் சட்டம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கும் முயற்சிகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ள நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அதன் பிரதிபளிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த மசோதாவும் இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பொது சிவில் சட்ட வரைவு மசோதா தயார் - விரைவில் தாக்கல் : உத்தரகாண்ட் முதலமைச்சர் தாமி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.