ETV Bharat / bharat

ஐநா பருவ நிலை மாநாடு: இந்திய குழுவுக்கு மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமை

author img

By

Published : Nov 4, 2022, 4:40 PM IST

எகிப்தில் நடக்கும் ஐநா பருவ நிலை மாநாட்டில் இந்திய குழுவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையேற்க உள்ளார்.

இந்திய குழுவுக்கு மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமை

டெல்லி: ஐநா பருவநிலை மாநாடு (UNFCCC - COP 27) எகிப்தின் ஷார்ம் எல் ஷேக்கில் நவம்பர் 6ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் இந்திய குழுவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமை வகிக்கிறார். இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தரப்பில், "இந்த மாநாடு தொடர்பாக, எகிப்து அரசின் முயற்சிகளுக்கு முழுமையாக ஆதரவு அளிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது.

வளரும் நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப செயல் திட்டங்களை வகுக்கும் எகிப்து அரசின் தலைமைக்கு இந்தியா ஆதரவு வழங்குகிறது. இழப்பு, சேதம் ஆகியவை இரண்டு முக்கியமான சிக்கல்களாகும். இந்த இரு சிக்கல்களிலும் முன்னேற்றம் ஏற்படுவது அவசியமானதாகும். இழப்பு மற்றும் சேதம் என்பது இந்த மாநாட்டின் முக்கியமான செயல்திட்டங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதும், சேதத்திற்கு நிதி வழங்களில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதும் முக்கிய நோக்கமாகும்.

பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை என்ற இயக்கத்தில் அனைத்து நாடுகளும் இணைய வேண்டும் என்று இந்தியா இந்த மாநாட்டில் மீண்டும் வலியுறுத்த உள்ளது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, மக்களுக்கு ஆதரவான, பூமிக்கும் நன்மை பயக்கும் வாழ்க்கை முறைகளுக்கான முயற்சிகளுக்கு உலகம் மாறவேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் கொள்கையாகும்.

பருவ நிலை மாற்றத்தில் உள்நாட்டு அளவிலான சிறந்த செயல்பாடு மற்றும் சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட இந்தியா உறுதிபூண்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகள் அனைத்தையும் தொடர்ந்து எதிர்த்து போராடவும், பூமியை காப்பதற்கும் இந்தியா ஒத்துழைப்பு அளிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல்; தென்கொரியா மக்களுக்கு எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.