மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் சதானந்த கவுடா கடந்த மூன்றாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் ஜனவரி 2ஆம் தேதி இரவு நடந்த பாஜக கூட்டத்தில் கலந்துகொண்ட பின் பெங்களூரு திரும்பிய இவர் வழியில் திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவர், சித்ரதுர்கா பசவனேஸ்வர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு ரத்தத்தில் குறைந்த சர்க்கரை இருந்ததாகக் கண்டறியப்பட்டது. பின்னர் பெங்களூரு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை பெற்ற அவர், தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
சில நாள்கள் ஓய்வுக்குப் பின் இவர் மீண்டும் இயல்பாகச் செயல்படத் தொடங்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 6 மாத காலத்தில் ரூ.82 லட்சம் அரசின் பணத்தைச் செலவழித்த மெஹபூபா முப்தி - ஆர்.டி.ஐ. தகவல்