ETV Bharat / bharat

மத்திய அரசு பணிகளுக்கு அடுத்தாண்டு முதல் பொதுத் தேர்வு: ஒன்றிய அமைச்சர் - Common Eligibility Test will be conducted across the country from early 2022

மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு, அடுத்தாண்டு (2022) தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஒன்றிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

union minister jitendra
union minister jitendra
author img

By

Published : Jul 6, 2021, 8:25 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட தலையீட்டின் காரணமாக, இந்தாண்டு இறுதியில் நடக்கவிருந்த பொதுத் தகுதித் தேர்வு கரோனா பெருந்தொற்றின் காரணமாக, அது தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

'குடிமைப் பட்டியல் 2021' எனும் ஐஏஎஸ் அலுவலர்கள் குறித்த மின் புத்தகத்தை வெளியிட்டு ஒன்றிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பேசுகையில், "மத்திய அரசு பணிக்கு இளைஞர்களைத் தேர்வு செய்யும் முறையை எளிமைப்படுத்துவதற்கான பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் திருப்புமுனைச் சீர்திருத்தமாக பொதுத் தகுதித் தேர்வு அமைந்திருக்கிறது.

இளைஞர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி வைத்திருக்கும் அக்கறையின் அடையாளமாகவும், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அவரது முனைப்பின் பிரதிபலிப்பாகவும், இந்த மிகப் பெரிய சீர்திருத்தம் அமைந்துள்ளது.

பொதுத் தகுதித் தேர்வை நடத்துவதற்காக, ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலுடன் தேசிய ஆள்சேர்ப்பு முகமை அமைக்கப்பட்டு இருக்கிறது. அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம் மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் ஆகியவற்றால், தற்போது அரசுத் துறைகளுக்காக நடத்தப்படும் ஆள்சேர்ப்பு தேர்வுகளுக்குப் பதிலாக பொது தகுதித் தேர்வை தேசிய ஆள்சேர்ப்பு முகமை நடத்தும்.

பிரிவு பி மற்றும் சி பணியிடங்களுக்கு (தொழில் நுட்பம் சாராத) தகுதியானவர்களை தேசிய ஆள்சேர்ப்பு முகமைப் பொதுத் தகுதித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கும்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையமாவது இருக்கும் என்பதும் இதன் மூலம் தொலைதூரப் பகுதிகளில் வாழும் தேர்வர்களுக்கான அணுகல் பெரிய அளவில் மேம்படும் என்பதும், இந்த சீர்திருத்தத்தின் மிக முக்கிய அம்சம்" என்றார்.

இதையும் படிக்கலாமே:புதிய மின்திட்டங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.