புது டெல்லி: ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் கரோனாவிலிருந்து சில நாள்களில் மீண்டு, தன் பணிக்கு மீண்டும் திரும்பினார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலருக்கும் தொற்றிலிருந்த மீண்டு வந்த முதல் சில மாதங்களுக்கு தொற்றின் பிந்தைய சிக்கல்கள் தொடர்ந்து வரும் நிலையில், ரமேஷ் பொக்ரியாலுக்கும் சில வாரங்களில் கரோனா தொற்றின் பிந்தைய சிக்கல்கள் தொடர, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சுமார் ஒரு மாத காலத்துக்குப் பிறகு அவரது உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து, இன்று (ஜூன்.29) ரமேஷ் பொக்ரியால் வீடு திரும்பியுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.
61 வயதாகும் ரமேஷ் பொக்ரியால், முன்னதாக தான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடுத்தாண்டு நீட் தேர்வுகள் 2 முறை நடத்தப்படுமா? மத்திய கல்வித் துறை அமைச்சரின் பதில் என்ன?