ETV Bharat / bharat

மத்திய பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு ரூ.5,300 கோடி ஒதுக்கீடு - எதிர்க்கட்சிகள் கண்டனம்! - எதிர்க்கட்சிகள் கண்டனம்

மத்திய பட்ஜெட்டில், கர்நாடகா மாநிலத்திற்கு பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்காக 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த நிதி ஒடுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.

union
union
author img

By

Published : Feb 1, 2023, 12:44 PM IST

டெல்லி: 2023-24ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்ற மக்களவையில் இன்று(பிப்.1) தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் உரையில், கர்நாடக மாநில விவசாயிகளுக்கான சிறப்பு திட்டங்களை அறிவித்தார்.

கர்நாடகாவில் பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்காக ஐந்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், கர்நாடக மாநிலத்திற்கு வறட்சி பாதிப்பு நிதியாக 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால், அதனை கருத்தில் கொண்டு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.

இதையும் படிங்க: Union Budget 2023: வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.