2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (பிப் 1) தாக்கல் செய்தார். பாஜக தலைமையிலான மத்திய அரசின் இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பாஜக கட்சி தொண்டர்களிடம் காணொலி மூலம் உரையாற்றினர்.
அவர் பேசியதாவது, "இந்தியா உலக அரங்கில் வலிமை மிக்க சக்தியாக உருவெடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். எனவே, உலகளவில் இந்தியா தலை சிறந்து விளங்க பல்வேறு துறைகளில் தீவிர வளர்ச்சி அடைய வேண்டியது அவசியம். இந்த பட்ஜெட் இந்தியாவை நவீன பாதை நோக்கி பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நவீன இந்தியா என்பது தற்சார்பு பொருளாதார என்ற அடத்தளத்தில் அமைய வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு பட்ஜெட்டை வரவேற்றுள்ளன. ஏழைகள், நடுத்தர வர்க்கம், இளைஞர்கள் என அனைத்து தரப்பின் தேவைகளையும் இந்த பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளது.
நாட்டின் எல்லைப் பகுதி கிராமங்களை பாதுகாக்கும் விதமாக எல்லைப் பகுதிகளில் 'துடிப்பான கிரமங்கள்' என்ற திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் மொத்த ஜிடிபி ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது ஜிடிபி ரூ.2.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மக்கள் நலனை மனதில் வைத்து முன்னேற்றத்திற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் வழங்கியுள்ளார்." இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதையும் படிங்க: நரேந்திர மோடியிடம் கடவுளின் அம்சங்களைக் காண்கிறேன் - சிவராஜ் சிங் சவுகான்