ETV Bharat / bharat

Budget 2022: மத்திய பட்ஜெட்டில் உள்ள 10 முக்கிய அம்சங்கள் - மத்திய பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்

மத்திய பட்ஜெட் 2022-23இல் இடம் பெற்றுள்ள 10 முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு காணலாம்.

Budget 2022
Budget 2022
author img

By

Published : Feb 1, 2022, 8:54 PM IST

டெல்லி: நாடாளுமன்றத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(பிப்.1) தாக்கல் செய்தார்.

வேளாண்துறை, கல்வித்துறை, வருமான வரி குறித்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய பட்ஜெட்டில் உள்ள 10 முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு காணலாம்.

1. வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை: மத்திய பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி மற்றும் அதற்கான உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு எவ்வித மாற்றமும் இன்றி ரூ.2.50 லட்சமாகவே தொடரும்.

மத்திய அரசின் பயனுள்ள மூலதனச் செலவு 2022-23இல் ரூ.10.68 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 விழுக்காடாக இருக்கும். அதே நேரத்தில், நிதிப் பற்றாக்குறை 6.4 விழுக்காடாக இருக்கும்.

2. டிஜிட்டல் கரன்சி: பிட்காயின் போன்ற கிரிப்ட்டோகரன்சி மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும். பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய டிஜிட்டல் கரன்சி ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும்.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளின்கீழ் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்.

3. போக்குவரத்து: 25,000 கி.மீ., தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும். 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் 400 புதிய ரயில்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் இயக்கப்படும்.

4. மன ஆரோக்கியம்: தொற்றுநோய் காலத்தில் மன ரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ள, ஆலோசனைகளைப் பெற மனநல மருத்துவத் திட்டம் (National tele-mental health program) தொடங்கப்படும்.

5. கதிசக்தி திட்டம்: பிரதமரின் கதிசக்தி திட்டத்தின்கீழ், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் மூலம் பொருளாதாரத்தை முன்னேற்ற வழிவகுக்கப்படும்.

6. கல்வி தொலைக்காட்சி: கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் செயல்படாததால், மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த கல்வி தொலைக்காட்சி சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும்.

1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அந்தந்த மாநில மொழிகளில் பாடம் கற்க 200 கல்வித்தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கப்படும். தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

7. வேளாண்துறை: கிசான் டிரோன் திட்டம் மூலம் விவசாய நிலங்கள் டிரோன் கொண்டு அளவீடு செய்யப்படும்.

இயற்கை விவசாயம் செய்ய ஊக்குவிக்கப்படும். உள் நாட்டிலேயே எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்க விரிவான திட்டம் செயல்படுத்தப்படும்.

கங்கை ஆற்றங்கரையோர இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோதாவரி, பெண்ணாறு, காவிரி உள்ளிட்ட 5 நதிகள் இணைப்பு திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

8. வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சித் திட்டம்: வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக பிரதமர் அபிவிருத்தி முன்னெடுப்புத் திட்டம் அமல்படுத்தப்படும். எல்லையோர கிராமங்களின் வளர்ச்சி மேம்படுத்தப்படும்.

9. இ- பாஸ்போர்ட் மற்றும் 5ஜி: பொதுமக்களின் வசதிக்காக சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட இ- பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும். 5ஜி இணை சேவை வழங்க அலைக்கற்றை ஏலம் விடப்படும்.

10. மேக் இன் இந்தியா: பாதுகாப்புத்துறை சார்ந்த தளவாடங்கள் இறக்குமதி குறைக்கப்பட்டு, மேக் இன் இந்தியா திட்டம் மூலம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும். ஆராய்ச்சி, மேம்பாடு தொழில்நுட்ப வளர்ச்சிக்காக 5 விழுக்காடு நிதி ஒதுக்கப்படும்.

இதையும் படிங்க: மத்திய பட்ஜெட்டில் ஏமாற்றமே மிஞ்சுகிறது - வைகோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.