ETV Bharat / bharat

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, பல துண்டுகளாக வெட்டிய இளைஞர் கைது - சிறுமியை கொலை செய்த இளைஞர் கைது

ராஜஸ்தானில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி கொலை செய்யப்பட்டிருப்பதும், அவரது உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டிருப்பதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, துண்டு துண்டாக வெட்டிய இளைஞர் கைது

author img

By

Published : Apr 2, 2023, 9:59 PM IST

உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர், அந்த சிறுமியை கொலை செய்துடன் உடலை பல துண்டுகளாக வெட்டி உள்ளார். இந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து உதய்பூர் எஸ்பி விகாஸ் சர்மா கூறுகையில், உதய்பூரில் வசித்து வந்த சிறுமியின் பக்கத்து வீட்டிலேயே அந்த இளைஞரும் வசித்து வந்தார். இவர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார்.

மார்ச் 29ஆம் தேதி சிறுமி தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, இந்த இளைஞர் சிறுமியிடம் சென்று வீடியோ கேம் விளையாடலாம் என்று கூறி அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பின் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதையடுத்து சிறுமியை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.

இந்த நேரத்தில் அந்த இளைஞரின் வீட்டில் யாருமில்லை. இவரது பெற்றோர் வீட்டிற்கு வருவதற்குள் சிறுமியின் உடலை அப்புறப்படுத்த எண்ணி, அந்த உடலை பல துண்டுகளாக வெட்டியுள்ளார். இதையடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வெட்டப்பட்ட உடலை வீசிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அன்றிரவே தனது 8 வயது மகளை காணவில்லை என்று அவரது பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதனடிப்படையில் சிறுமி தேடப்பட்டு வந்த நிலையில், அவரது வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இதன் முடிவில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

கொலை நடந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லையென்பதால், சந்தேகத்தின் பேரில் பலரிடம் விசாரணை செய்தோம். அப்படி அந்த இளைஞரிடமும் விசாரணை செய்யப்பட்டது. அப்போது மேற்கூறிய உண்மை தெரியவந்தது. இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.