தெலங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டம் நச்சரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, அப்பகுதி காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டதில், 18 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் இருவரும், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரத்னம் (35), நாக வெங்கட கிருஷ்ணவேணி (30) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து, ரூ.28,700 ரொக்கம், விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
இதையும் படிங்க: திருவள்ளூரில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்