ஹிமாச்சலப் பிரதேசம் ரோஹ்தாங்கில், கரகாட் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர், கேக், மிட்டாய் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடைக்கு சமோசா வாங்க வந்த இருவர், விலை அதிகமாக உள்ளது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில், அவர்கள், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கடை உரிமையாளர்களைச் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இதில், மூத்த சகோதரர் ரவ்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு நபர் அருண், ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவரைக் கைது செய்தனர். தலைமறைவாகவுள்ள நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். குற்றவாளியைப் பிடிப்பதற்காக, அப்பகுதியில் காவல் துறையினர் முகாமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: போதையில் பைக் ஓட்டியதாகக் கூறி வழக்குப் பதியாமல் இருக்க கையூட்டு: 2 காவலர்கள் கைது