ETV Bharat / bharat

என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ஜம்மு போலீஸ் அதிரடி - search op had started on Jun 14

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் காவல்துறையில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ஜம்மு போலீஸ் அதிரடி

author img

By

Published : Jun 17, 2022, 7:44 AM IST

ஜம்மு-காஷ்மீர்: குல்காம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வந்தது. பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை செய்திதொடர்பாளர் கூறியுள்ளார். மேலும் அப்பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்முவில் தொடரும் பயங்கரவாத தாக்குதலை கட்டுப்படுத்த கடந்த ஜூன் 14 ஆம் தேதி முதல் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இது குறித்து காவல்துறை அளித்த தகவலின் படி, தெற்கு மாவட்டமான குல்காமில் உள்ள மஷிபுரா கிராமத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

கடந்த வியாழக்கிழமை (ஜூன் 16)மதியம் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். குல்காமில் மஷிபுரா என்கவுன்டரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கு பெண் ஆசிரியை ரஜினி பாலா கொலையில் தொடர்பு இருப்பதாக காஷ்மீர் மண்டல காவல் கண்காணிப்பாளர் விஜய் குமார் தெரிவித்தார்.

முன்னதாக அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்ததை அடுத்து ராணுவத்தினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் இருந்து துப்பாக்கி குண்டுகள் சத்தமும் கேட்டது. பின்னர் இரவு நேரத்தில் அப்பகுதியில் இராணுவத்தினர் இருமுறை நடவடிக்கையை நிறுத்தியிருந்தனர்.

ஜூன் 15 ஆம் தேதி காலை, கிராமத்தில் இருந்த பயங்கரவாதிகளுக்கும் படைகளுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஆனால் துப்பாக்கிச் சூடுக்குப் பிறகு பயங்கரவாதிகள் தப்பிச் சென்றதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இதையும் படிங்க:ஆசிரியரை கொன்ற பயங்கரவாதி பிடிபட்டதாக தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.