ரஜோரி: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் தனமண்டி பகுதியில் இன்று(ஆகஸ்ட். 6) பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு விரைந்த வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கியிருந்த, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். அதற்கு பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும், புல்வாமா மாவட்டத்தில் கடந்த வாரம் நடந்த தாக்குதலில் முன்னாள் காவல் துறை அலுவலர், அவரது மனைவி, மகள் ஆகியோர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆப்கான்: 24 மணி நேரத்தில் 94 தலிபான், அல்கொய்தா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!