கர்நாடகாவில் உள்ள ஆனந்தபள்ளி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று டிப்பர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் காரில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்த ஆனந்தபள்ளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து போக்குவரத்தைச் சரிசெய்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து காவல் துறையினர் கூறுகையில், "உயிரிழந்தவர்களின் அடையாளம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, விபத்துக்குள்ளான கார் தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆந்திர - ஒடிசா எல்லை: அர்த்த ராத்திரியில் கிடைத்த தகவல்... ரூ.2 கோடி மதிப்புடைய கஞ்சா பறிமுதல்