ETV Bharat / bharat

மீண்டும் நிபா: 2 பேருக்கு அறிகுறி - health workers show symptoms of Nipah virus

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இரண்டு மருத்துவ பணியாளர்களுக்கு நிபா வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மீண்டும் நிபா
மீண்டும் நிபா
author img

By

Published : Sep 5, 2021, 6:07 PM IST

கோழிக்கோடு (கேரளா): கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டு மாநிலம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. அப்போது கோழிக்கோட்டில்தான், தென்னிந்தியாவில் முதன்முதலாக நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

தற்போது, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அதே மாவட்டத்தில் 12 வயது சிறுவன், நிபா வைரஸ் தொற்றின் அறிகுறிகளுடன் நேற்று (செப். 4) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இதையடுத்து, அச்சிறுவன் இன்று (செப். 5) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

சிறுவனின் மாதிரிகளை பரிசோதித்ததில், நிபா வைரஸ் தொற்று அச்சிறுவனை தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், முன்னதாக இன்று உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து, அச்சிறுவன் உடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

அதில், அச்சிறுவனுடன் அதிக தொடர்பில் இருந்த 20 பேர்களில், இரண்டு பேருக்கு நிபா வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

அரசு அலுவலர்களுடனான உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வீனா ஜார்ஜ்,"இதுவரை 188 பேர் அச்சிறுவனுடன் தொடர்பில் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளனர்.

அதில் 20 பேர் அதிகமாக தொடர்பில் இருந்தவர்கள் என்று அலுவலர்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு பேருக்கு தொற்றின் அறிகுறி தென்பட்டுள்ளது.

இரண்டு பேரும் மருத்துவ பணியாளர்கள். ஒருவர் தனியார் மருத்துவமனையிலும், மற்றொருவர் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த 20 பேரும் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று மாலை சேர்க்கப்படுவார்கள். மற்றவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள்.

அரசு மருத்துவமனையில் இருக்கும் கட்டணத்திற்குரிய வார்ட்டு முழுமையாக நிபா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை வார்ட்டாக மாற்றப்பட்டுள்ளது" என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.