ஸ்ரீநகர் (ஜம்மு): பாரமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் பகுதியில் லஷ்கர் -இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர், அங்கிருந்த காவல் துறையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் இரண்டு காவலர்கள், மூன்று பொதுமக்கள் என ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த இரு காவலர்கள் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை, ராணுவத்தினரும், மாநில காவல் துறையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சம்பவத்திற்கான பின்னணியில் லக்ஷர்-இ-தொய்பா அமைப்பு உள்ளது என ஜம்மு காஷ்மீர் காவல் தலைவர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மியான்மர் வன்முறையைக்கண்டித்த ஐ.நா.மனித உரிமைகள் கழகம்