மத்தியப் பிரதேசம்: நபீபியாவில் இருந்து மத்தியப் பிரதேச மாநிலம் குனோ(kuno) தேசிய பூங்காவிற்கு 8 சிவிங்கி புலிகள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன. இந்த சிவிங்கி புலிகளை பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி பூங்காவில் ஒப்படைத்தார்.
வேறு கண்டத்தில் இருந்து கொண்டு கொண்டு வரப்பட்ட விலங்கு என்பதால் அவற்றின் உடல் நிலையை கண்காணிக்கவும், உணவு, சுற்றுச்சூழல் பழக்கத்திற்காக சிறிய பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டன.
தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த நிலையில், எட்டு சிவிங்கி புலிகளுக்கும் ஆரோக்கியமாக இருப்பதாக மத்திய கால்நடை பராமரிப்புத் துறை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தடையில்லா சான்று வழங்கியது.
இதனையடுத்து எல்டன், ஃப்ரெட்டி என்ற இரண்டு ஆண் சிவிங்கி புலிகள் குனோ தேசிய பூங்காவின் பரந்த வனப்பகுதியில் திறந்து விடப்பட்டன. இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
-
Kuno Cheetahs make their first hunt a day after shifting to large enclosure
— ANI Digital (@ani_digital) November 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read @ANI Story | https://t.co/qzXc0Mjv7u#Kuno #Cheetahs #Kunonationalpark #KunoCheetahs pic.twitter.com/5px7q2j8WG
">Kuno Cheetahs make their first hunt a day after shifting to large enclosure
— ANI Digital (@ani_digital) November 7, 2022
Read @ANI Story | https://t.co/qzXc0Mjv7u#Kuno #Cheetahs #Kunonationalpark #KunoCheetahs pic.twitter.com/5px7q2j8WGKuno Cheetahs make their first hunt a day after shifting to large enclosure
— ANI Digital (@ani_digital) November 7, 2022
Read @ANI Story | https://t.co/qzXc0Mjv7u#Kuno #Cheetahs #Kunonationalpark #KunoCheetahs pic.twitter.com/5px7q2j8WG
இந்த நிலையில், பரந்த வனப்பகுதியில் திறந்துவிடப்பட்ட இரண்டு சிவிங்கி புலிகளும் 24 மணிநேரத்திற்குள் முதல் வேட்டையாக புள்ளி மான் ஒன்றை புசித்துள்ளதாக மாவட்ட வனத்துறை அதிகாரி பிரகாஷ் குமார் வர்மா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாரத் ஜோடா யாத்ரா... குருத்வாரா சென்ற ராகுல் காந்தி!