கடந்த செப்டம்பர் 22 மற்றும் செப்டம்பர் 27 அன்று நாட்டில் உள்ள பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை மற்றும் மாநில காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
15 மாநிலங்களில் உள்ள 93 இடங்களில் நடத்தப்பட்ட இச்சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று (செப் 28) சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி பிஎப்ஐ அமைப்பிற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று பிஎப்ஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிஎப்ஐ அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை - மத்திய அரசு