பிரபல சமூக வலைதளமான டிவிட்டரில் நம்முடைய கணக்கை சைன்- இன் செய்வதற்கு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் பயன்படுத்தி டிவிட்டருக்கான தனி பாஸ்வேர்டை கொடுத்து உள் நுழைய வேண்டும்.
இதை எளிமையாக்கும் விதமாக கூகுள் கணக்கை வைத்து டிவிட்டர் பயன்படுத்தும் வசதி கொண்டுவரப்பட உள்ளது என மாசபில் இந்தியா (Mashable India) நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாகவே இந்த வசதி ஆன்டிராய்டு பயனாளர்களுக்கு 'டிவிட்டர் பீட்டா' என்ற செயலி மூலம் வழங்கப்படுகிறது. இதில் டிவிட்டர் பயனாளர்கள் கூகுள் கணக்கை பயன்படுத்தி சைன் இன் செய்கின்றனர்.
ஆனால் இந்த வசதி எப்போது 'டிவிட்டரில்' பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்படவில்லை. டிவிட்டர் பீட்டா பயன்படுத்துவோர் நியூ வெர்சனை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அப்டேட் செய்யவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போதும்டா சாமி - வாய்திறந்தது பெகாசஸ் செயலியின் என்எஸ்ஓ குழுமம்