ட்விட்டர் இந்தியா அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை (மே 24) டெல்லி காவல் துறை ரெய்டு செய்தது. மேலும், பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பாத்ரா ட்வீட் செய்த பதிவு ஒன்றை, உண்மைக்கு புறம்பான செய்தி என ட்விட்டர் நிறுவனம் தனித்து அடையாளப்படுத்திக்காட்டியது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி ட்விட்டர் நிறுவனத்திற்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த அழுத்தங்கள் தொடர்பாக ட்விட்டர் இந்தியா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அரசு உருவாக்கியுள்ள புதிய ஐடி விதிமுறைகளில் ட்விட்டர் நிறுவனத்திற்கு சில மாறுபட்ட கருத்துகள் உள்ளன. அவை குறித்து இந்திய அரசிடம் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கத் தயாராகவுள்ளோம்.
அதேவேளை, காவல்துறை நிறுவனத்தை அச்சுறுத்தும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது கவலையை அளிக்கிறது.
இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களின் நிலை குறித்தும், கருத்துச் சுதந்திரம் குறித்தும் கவலை ஏற்பட்டுள்ளது என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கறுப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சைகளைத் தொடர்ந்து பச்சை பூஞ்சை....