டெல்லி: ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை விமர்சித்து ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "என் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது என் மீதான தாக்குதல் மட்டுமல்ல ஜனநாயக கட்டமைப்பின் மீதான தாக்குதல். 19 முதல் 20 மில்லியன் மக்கள் என்னை ட்விட்டர் தளத்தில் பின்பற்றுகின்றனர். என் கணக்கை முடக்கியதன் மூலம், என்னை பின்தொடர்பவர்களின் கருத்துரிமையை ட்விட்டர் மறுக்கிறது. அரசியலில் ஒரு சார்பு எடுப்பது சரியல்ல.
-
“This is an attack on the democratic structure of our country not on me” - Rahul Gandhi
— Ali Mehdi#Unlock RahulGandhi (@alimehdi_inc) August 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
pic.twitter.com/TYvqKuErIj
">“This is an attack on the democratic structure of our country not on me” - Rahul Gandhi
— Ali Mehdi#Unlock RahulGandhi (@alimehdi_inc) August 13, 2021
pic.twitter.com/TYvqKuErIj“This is an attack on the democratic structure of our country not on me” - Rahul Gandhi
— Ali Mehdi#Unlock RahulGandhi (@alimehdi_inc) August 13, 2021
pic.twitter.com/TYvqKuErIj
நாடாளுமன்றத்தில் பாஜக எங்களை பேச அனுமதிப்பதில்லை. ஊடகங்களையும் அவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், என்னுடைய கருத்தை தெரிவிப்பதற்கான தளமாக ட்விட்டர் இருப்பதாக எண்ணினேன். ஆனால், ட்விட்டர் நிறுவனம் ஒரு சார்பாக செயல்படுவது வெளிப்படையாக தெரிகிறது. அரசாங்கம் கூறுவதை அது கேட்கிறது" என தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக விளக்கமளித்துள்ள ட்விட்டர் நிறுவனம், தாங்கள் யாருக்கும் சார்பாக நடக்கவில்லை என கூறியுள்ளது. மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சி ட்விட்டர் கணக்கு முடக்கம்- பாஜக காரணம் இல்லை என அண்ணாமலை விளக்கம்