ETV Bharat / bharat

BIG BOSS 15: டைட்டிலை வென்றார் தேஜஸ்வி - தேஜஸ்வி பிரகாஷ்

மும்பையில் நடைபெற்ற பிக் பாஸ் 15 நிகழ்ச்சில், தேஜஸ்வி பிரகாஷ் வெற்றி பெற்றுள்ளார்.

தேஜஸ்வி பிரகாஷ்
தேஜஸ்வி பிரகாஷ்
author img

By

Published : Jan 31, 2022, 1:22 PM IST

மும்பை: 16 வாரங்கள் பல வித சஸ்பென்ஸ்களுடன், ரசிகர்களை எதிர்பார்ப்புடன் காத்திருக்க வைத்த பிக் பாஸ் 15 நேற்று (ஜன 30) முடிவுக்கு வந்தது. இதில், போட்டியின் வெற்றியாளரை, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சல்மான் கான் அறிவித்தார். இப்போட்டியை வென்றவர் தொலைக்காட்சி நடிகை தேஜஸ்வி பிரகாஷ்.

இன்ஜினியரிங் பட்டதாரியாக இருந்து தொலைக்காட்சி நடிகையாக மாறிய தேஜஸ்வி, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாகின் 6’ நாடகத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்தார். இவர் பிக் பாஸ் பட்டத்தை வென்றதுடன், 40 லட்சம் காசோலையையும் தட்டிச் சென்றார்.

தேஜஸ்வி பிரகாஷ்
தேஜஸ்வி பிரகாஷ்

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியை முடித்து வைத்த சல்மான், ரசிகர்களுக்கு ஒரு ட்விஸ்ட்டையும் வைத்துள்ளார். அதாவது “நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடுத்த சீசனை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருங்கள்” என நிகழ்ச்சியின் இறுதியில் கூறினார். இதனால், பிக் பாஸ் 16 ல் சல்மானைப் பார்க்க முடியுமா..? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

இதையும் படிங்க: புதிய முறையில் கதாநாயகன் தேடல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.