ETV Bharat / bharat

போலீஸ் முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின மக்கள் போராட்டம்!

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் போலீஸ் முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுவோரை பொய் வழக்குகளில் போலீசார் கைது செய்வதாக பழங்குடியின மக்கள் குற்றம்சாட்டினர்.

Tribals protest to open police camp Narayanpur

author img

By

Published : Dec 18, 2022, 6:59 PM IST

நாராயண்பூர்(சத்தீஸ்கர்): சத்தீஸ்கர் மாநிலம், கான்கேர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், கார்ப்பரேட் நிறுவனங்களின் பயன்பாட்டுக்காக சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்டவற்றை அம்மாநில அரசு கட்டுவதாக தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஓராண்டுக்கும் மேலாக பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு போராடும் மக்களை, நக்சல்கள் என்று கூறி போலீசார் கைது செய்தனர். அப்பகுதிகளில் முகாமிட்ட போலீசார், பொய் வழக்குகளில் ஏராளமான பழங்குடியின மக்களை கைது செய்தனர். இதனால் காவல்துறை முகாம்களை அகற்றக்கோரியும் அம்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் ப்ரெஹ்பேடா என்ற பகுதியில் போலீசார் புதிய முகாம் ஒன்றை அமைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து பழங்குடியின மக்கள் கூறும்போது, "நவம்பர் 1ஆம் தேதி முதல், நூற்றுக்கணக்கான பழங்குடியினர் போலீஸ் முகாமுக்கு எதிராகப் போராடி வருகின்றோம். கடந்த நவம்பர் 28ஆம் தேதி, போலீசார் எங்களை விரட்டியடித்தனர். டிசம்பர் 11ஆம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 16ஆம் தேதி போலீசார் மீண்டும் அங்கு முகாம் அமைத்து, அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

போலீசார் இங்கிருந்து வெளியேற வேண்டும். கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றபோது, போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இரண்டு இளைஞர்களை நக்சல்கள் எனக்கூறி கைது செய்தனர். பழங்குடியினரின் பாதுகாப்பிற்காக போலீஸ் முகாம் திறக்கப்பட்டிருந்தால், அவர்கள் ஏன் மனு கொடுக்கவிடாமல் தடுக்கிறார்கள்?" என்றனர்.

இதையும் படிங்க:"வட கிழக்கு பிராந்தியத்தில் மோடி அரசு அமைதியை நிலைநாட்டியுள்ளது" - அமித் ஷா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.