கர்நாடகா மாநிலம், ஹவேரி மாவட்டத்தில் வசிக்கும் தருண் பெல்லாரி என்ற சிறுவன், தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, பந்து சுற்றுச்சுவரைத் தாண்டி வெளியே சென்றுள்ளது. உடனடியாக, பந்தை எடுக்க தருண் சுற்றுச்சுவர் மீது, ஏறி தாண்ட முயற்சித்துள்ளான்.
அப்போது, எதிர்பாராத வகையில், அங்கிருந்த மரத்தின் கிளை தருணின் தொடையைக் கிழித்து கொண்டு நுழைந்துள்ளது.
வலியில் சிறுவன் துடிப்பதைப் பார்த்து ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், தொடையிலிருந்த மரக்கிளையை வெற்றிகரமாக அகற்றினர்.
இதையடுத்து, சிறுவன் அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.