ETV Bharat / bharat

திருமணமான பெண்ணுக்கு 6 ஆண்டுகளாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் தொல்லை - திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை

குஜராத் மாநிலத்தில் திருமணமான பெண்ணிடம் தன்னை 2ஆவது திருமணம் செய்துகொள்ளுமாறு 6 ஆண்டுகளாக தொல்லை கொடுத்துவந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Traffic Police Inspector booked for harassing woman in Gujarat

author img

By

Published : Oct 7, 2022, 6:24 PM IST

காந்திநகர்: குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் பிரியங்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்துவருகிறார். அவர், சுரேந்திரநகர் போலீசாரிடம் இன்று (அக். 7) புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், அதே பகுதியை சேர்ந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் யஷ்பால் கோஹில் என்பவர் 2016ஆம் ஆண்டு முதல் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி எனக்கு தொல்லை கொடுத்துவருகிறார்.

பலமுறை கொலை மிரட்டல் விடுத்துள்ளார். என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்தார். 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம், எனது கணவரை தாக்கினார். எனது செல்போன் எண்ணை சட்டவிரோதமாக கண்காணிக்கிறார். எனது புகைக்கப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து எனது கணவரின் சகோதரருக்கு அனுப்பினார். ஆகவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் சுரேந்திரநகர் போலீசார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோஹில் மீது, பின்தொடர்தல், வன்புணர்வு, வீட்டில் அத்துமீறி நுழைதல், மரணம் அல்லது காயம் விளைவிக்கும் வகையில் அச்சுறுத்தல், தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பழங்குடியினப் பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு, பிறப்புறுப்பை சிதைத்த 2 காவலர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.