மேற்கு வங்க மாநிலத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "தோமர் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாளை அல்லது நாளை மறுநாள் டெல்லியில் போராடிவரும் விவசாய பிரதிநிகளைச் சந்திப்பார்.
அவர் சந்திக்கும் நேரம் குறித்து தெரியவில்லை. ஆனால் விவசாயிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை விவாதிக்க உள்ளார்" எனத் தெரிவித்தார்.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
டெல்லி மற்றும் டெல்லியில் உள்ள ஹரியானா, உத்தரப்பிரதேச எல்லைகளில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 26 ஆவது நாளை எட்டியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாகப் பல்வேறு மாநிலங்களிலும் விவசாய சங்கத்தினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
மத்திய அரசு - விவசாயிகள் இடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.