மேஷம்: இன்று நீங்கள் அமானுஷ்யமான விஷயங்களில் மனதை ஈடுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இந்த விஷயங்கள் தொடர்பான புத்தகங்களை வாங்கி படித்து அறிந்து கொள்ள விரும்புவீர்கள். அதில் உள்ளவற்றை பற்றி விரிவாக பேசுவீர்கள். இந்த அறிவை, நல்ல விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு தொடர்ந்து துன்புறுத்தல் கொடுத்து வந்த ஒருவரை நீங்கள் சந்திக்க நேரிடலாம். உங்களது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, அவருடன் மோதல் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. அமைதியாக செயல்படவும். உங்களது வளமையான எதிர்காலத்தை பாதிக்காத வண்ணம் எதிர்வினை ஆற்றவும். மற்றவர்களின் நடவடிக்கைகளால் பொறுமை இழக்காமல் இருப்பது நல்லது. நாகரிகமாக பழகும் உங்கள் தன்மைதான் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
மிதுனம்: நெடுநாட்களாக ஏற்படுத்த விரும்பிய குடும்பத்தினரின் சந்திப்பை, உங்கள் வீட்டில் இன்று ஏற்பாடு செய்யக் கூடும். இன்றைய தினம் அதற்கு ஏற்ற நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினரை மட்டுமல்லாமல், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் முக்கிய வர்த்தக கூட்டாளிகள் ஆகியோரையும் நீங்கள் அழைத்து விருந்து அளிக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையும் இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்.
கடகம்: இன்றைய பொழுது, உற்சாகத்துடன் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. உங்களது உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியை, யாராலும் தடுக்க முடியாது. நீங்கள் செல்லும் இடத்திலும் மக்களை உற்சாகப்படுத்துவீர்கள். எனினும், மனதிற்கு வருத்தம் அளிக்கக் கூடிய கெட்ட செய்தி வரும் வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம் ஏற்பட்டால், அமைதியாக ஓய்வெடுத்துக் கொள்ளவும். இன்றைய நாளின் முடிவில் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்து விடும்.
சிம்மம்: இன்று முழுவதும், பணியிடத்திலேயே இருப்பீர்கள். பெரிய நிறுவனங்களில் பணி செய்பவர்கள், மேலதிகாரியின் அதிக அளவிலான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பணிகளை மேற்கொள்வார்கள். இல்லத்தரசிகளுக்கு தினசரி பணிகளை தவிர, வேறு விதமான வேலைகளையும் சமாளிக்க வேண்டிய நிலை இருக்கும். இது ஒரு முக்கியமான நாளாக இருக்கும்.
கன்னி: இன்று நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரத்தைக் கழிப்பீர்கள். தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் நேரத்தை திறமையாக நிர்வகித்து, பாடங்களைக் கற்று முடிப்பார்கள். சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு இது சிறந்த நாளாக இருக்கும்.
துலாம்: ஒத்த எண்ணங்களை உடைய மக்களை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அவர்களுடன் சிறந்த வகையில் பயனுள்ள ஆலோசனைகளை நடத்த முடியும். இதனால் உலகம் குறித்த உங்களது அறிவு விரிவடையும். உங்கள் முயற்சிகளில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவீர்கள்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களைப் பொறுத்தவரை வாழ்க்கையில் காதலும், ஈடுபாடும் அதிகம் இருக்கும். இன்றைய நாளை திட்டமிடும்போது, வாழ்க்கையில் நீங்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். இதில் தவறு ஏதும் இல்லை, உங்களது எல்லை என்ன என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
தனுசு: இன்று நீங்கள் முழுமையாக நடுநிலையுடன் செயல்படுவீர்கள். ஒரு குடும்ப உறுப்பினராக, நீங்கள் பணியில் கவனம் செலுத்தி, வீட்டின் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டு நடுநிலையாக செயல்படுவீர்கள். பணியிடத்தில் வேலைப்பளு சிறிது குறைவாகவே இருக்கும். மாலையில் நீங்கள் இனிமையாக நேரத்தைக் கழிக்கும் வாய்ப்பு உள்ளது.
மகரம்: உங்களது அபரிமிதமான பேச்சாற்றல் காரணமாக, உங்களைச் சுற்றி இருப்பவர்களை நீங்கள் அமைதிபடுத்துவீர்கள். எனினும், நீங்கள் இந்த திறமையை மேலும் வளர்த்துக் கொள்வது நல்லது. பிரச்னைகளின் ஆணி வேர் வரை சென்று ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை கண்டுபிடிப்பீர்கள்.
கும்பம்: நீங்கள் புதை மணலில் சிக்கிக் கொண்டதைப் போலவும், எங்களைக் காப்பாற்ற யாரும் இல்லை என்பது போலவும் உணர்வீர்கள். எனினும், எவரின் ஆதரவும் இன்றி செயல்படும் தன்மையுடைய கும்பராசிக்காரர்கள், இதிலிருந்து மீண்டு விடுவார்கள். உங்களுடைய இந்த உறுதியான மனப்பான்மை, உங்களை இந்த விஷயத்தில் இருந்து காப்பாற்றி கரை சேர்க்கும்.
மீனம்: உங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் ஆர்வம் எப்போதும் இருக்கும். அதற்கான காரணத்தை நீங்கள் தேடிக் கொண்டு இருப்பீர்கள். அதனால் இன்று நீங்கள் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டால், அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தினசரி பணியிலிருந்து விலகி, புத்துணர்ச்சி பெற இது மிகவும் தேவையான விஷயமாகும்.