மேஷம்: குறிப்பிட்ட சில காரணத்தினால் உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படலாம். அனைத்தும் உங்களுக்கே சொந்தம் என்னும் எண்ணம் இருக்கும். அதனால், உங்கள் உடமை மீது சிறிது பயம் ஏற்படக்கூடும். அன்பால் உறவுகள் மலரும். திருமண வார்த்தை செழிப்புறும்.
ரிஷபம்: சிறிய பயணத்தை மேற்கொள்ளலாம். பயணத்தில் சில மாற்றங்களை செய்ய நிர்பந்திக்கப்படுவீர்கள். அதனால், மனம் சிறிது வருத்தம் அடையலாம். திட்டங்களை முன்கூட்டியே தீர்மானித்து செயல்படுத்துதல் நன்மையை கொடுக்கும். அதனால், குழப்பமின்றி அந்த நாள் அமைய உதவும். பயணத்தின் மாற்றங்கள் நன்மை தரும். அதன் காரணமாக, உங்கள் பயணம் பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் அமையும் வாய்ப்புள்ளது.
மிதுனம்: எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்க சிரமப்படுவதுடன், மன அழுத்தம் ஏற்படக்கூடும். அதனால், மன நிலையிலும் மாற்றம் ஏற்படும். குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் உங்கள் பிரச்னைகளை கூறுவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடகம்: உங்கள் கற்பனைத்திறன் அதிகரிக்கக்கூடும், கருத்துக்கள் சிறந்து விளங்கும். கௌரவம் அதிகரிப்பதுடன், உங்கள் முயற்சிக்கான பலங்கள் கிடைக்கும் விதமாக, பாராட்டு கிடைக்கப் பெறலாம். படைப்பாற்றல் அதிகரிக்கும் மற்றும் காரிய சித்தி அடைய ஏற்ற நாளாக அமையலாம்.
சிம்மம்: இன்று சவாலான நாளாக இருக்கலாம். பதட்டங்களும், சிக்கல்களையும் எதிர்கொண்டாலும் அனைத்துப் பணிகளிலும் வெற்றியடைய சாத்தியக்கூறுகள் நிறைந்து காணப்படுகிறது. அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். அலுவலக பணிக்கும், வீட்டிற்கும் இடையே சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
கன்னி: எந்த செயல் செய்தாலும், அதில் சிறந்து விளங்கக்கூடிய நாளாக அமையும். வெகு நாட்களாக வெளிநாட்டு வியாபாரம் செய்ய எடுத்த முயற்சிகள் நல்ல பலனை தரும். உங்கள் தோற்றத்தையும், ஆளுமையையும் மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்தல் அவசியமாகும்.
துலாம்: எந்த ஒரு புதிய வேலை தொடங்குவதற்கும் ஏற்ற நாளாக அமைய பெறலாம். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. எந்த வேலை செய்தாலும் அதில் காரிய சித்தி அடையும் நாளாக அமையும். இந்த நாள் அதிர்ஷ்டமான நாளாக இருக்கலாம்.
விருச்சிகம்: கவனமும், முயற்சியும் உங்களின் புது வியாபாரத்தில் இருக்கும் நிலை உருவாகும். வேலைப்பளு அதிகரிப்பதால், தனிப்பட்ட வாழ்க்கையைப் புறக்கணிக்க நேரிடலாம். உங்களின் முயற்சியும் வேலைகளும் திட்டமிட்டபடி நடக்காமல், ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்.
தனுசு: உங்களைச் சுற்றி இருக்கும் நல்ல உதவி புரியும் அன்பர்கள் உங்களுக்கு அறிவுரை வழங்கலாம். அவர்கள் கூறும் அறிவுரை உங்களின் நன்மைக்காக என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறும் அறிவுரையை மனதில் கொண்டு சந்தேகமின்றி உங்கள் முடிவுகளை எடுப்பதன் மூலம் நீங்கள் நன்மை அடைய வாய்ப்பு இருக்கிறது.
மகரம்: உயர்கல்விக்காக வெளிநாட்டிற்கு செல்ல தயாராக இருக்கிறீர்கள் என்றால், முதலில் உங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நல்ல நாளில் உங்கள் வேலைகளை பட்டியலிட்டு ஒவ்வொன்றாக முடித்தல் சிறந்தது. பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று அனுகூலமான நல்ல நாளாக அமைய வாய்ப்புள்ளது.
கும்பம்: முற்காலத்தில் செய்த முயற்சிகள் அனைத்திற்கும் நல்ல பயன் கிடைக்கப் பெறலாம். தற்போது அடைந்த சாதனையை எண்ணி திருப்தி கொள்வதை தவிர்க்கவும். இன்னும் கடினமாக உழைத்தால், நற்பலன் அவசியம் கிடைக்கப் பெறலாம்.
மீனம்: பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். மேலும், இடர்ப்பாடுகள் நிறைந்த பணிகள் செய்வதை தவிர்ப்பது நன்மை பயக்கும். உங்களுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன்வரலாம்.