சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டத்தில் சார்பட்டா என்ற பகுதியில், சூரஜ் சாஹு - குந்தி ஆகியோரின் திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மணமகள் வீட்டாரின் ஏற்பாடுகள் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது.
இது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்கனவே மனக்கசப்பு இருந்துள்ளது. இந்த நிலையில், பெண் வீட்டார் ஏற்பாடு செய்த உணவில் லட்டு இல்லை மணமகன் வீட்டார் சண்டை போட்டுள்ளனர். இருதரப்பினரிடையே மோதல் ஏற்படவே, ஆத்திரமடைந்த மாப்பிள்ளை பெண் வீட்டார் மீது புகார் கொடுக்க காவல்நிலையம் சென்றுள்ளார். இதையறிந்த பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டார் மீது புகார் கொடுக்க சென்றுள்ளனர்.
காவல்நிலையம் வந்த இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், அவர்களை சமாதானம் செய்து ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு உடனிருந்து திருமணத்தை நடத்தி வைத்த போலீசார், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்துள்ளனர். சிறிய பிரச்சினைக்காக வழக்குப்பதிவு செய்யாமல், சமாதானம் செய்து மீண்டும் திருமணத்தை நடத்தி வைத்த போலீசாருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆம்புலன்சுக்கு ரூ.10 ஆயிரம்... மகனின் உடலை 90 கி.மீ. பைக்கில் எடுத்துசென்ற தந்தை...