ஹைதராபாத்: தென்மேற்கு பருவமழை காரணமாகவும், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாகவும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக தெலங்கானா மாநில முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது.
அந்த வகையில் ஹைதராபாத்தில் மூன்று நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்துவருகிறது. மூசரம்பாக், தில்சுக்நகர், எல்பி நகர், காச்சிகுடா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனவோட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். தண்ணீரை அகற்றி போக்குவரத்தை சீர்செய்யும் முயற்சியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாள்களில் அதிகபட்சமாக நிஜாமாபாத்தில் 102.5 மி.மீ மழையும், பெம்பியில் 53.3 மி.மீ மழையும், மச்சாபூரில் 43.8 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதனிடையே ஹைதராபாத் வானிலை ஆய்வு மையம், அடுத்த மூன்று நாட்களுக்கு பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு