பாட்னா: பிகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள நிசாம்பூரில் மின்கம்பத்தில் மோதிய எஸ்யூவி கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சாராய் ஓபி போலீசார் தரப்பில், நிசாம்பூரின் சாராய் ஓபி பகுதியில் அதிகாலை 3 மணியளவில் அதிவேகமாக வந்த எஸ்யூவி கார் மின்கம்பத்தில் மோதி தீ பிடித்ததாக பொதுமக்கள் எங்களுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத்துறை அலுவலர்களுடன் சம்பவயிடத்திற்கு விரைந்தோம்.
1 மணி நேரம் போராடி தீயை அணைத்தும். இருப்பினும் காருக்குள் 3 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரில் ஒருவரை மட்டுமே அடையாளம் கண்டுள்ளோம். அவர் கோரியகொத்தி மாவட்டம் சரையா கிராமத்தைச் சேர்ந்த பசந்த்குமார் என்பது தெரியவந்துள்ளது. அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளோம். மற்ற இருவர் குறித்து விசாரித்துவருகிறோம். இதனிடையே அவர்களது உடல்கள் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒடிசாவில் சரக்கு ரயில் விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு