காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை ட்விட்டரில் விமர்சித்துள்ளார். நாட்டின் பொருளாதார சரிவை வெளிப்படுத்தும் புள்ளிவிவரத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, "கோவிட்-19 பாதிப்புக்கு முன்னர் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் 9.9 கோடியாக இருந்தனர். தற்போது அது 6.6 கோடியாக குறைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 5.7 கோடி பேர் நடுத்தர வர்க்கத்தினர் என்ற அந்தஸ்திலிருந்து பின்தங்கிய வர்க்கத்தினர் எனச் சரிவைக் கண்டுள்ளனர். வேலையின்மை, விலைவாசி ஆகியவற்றையும், தனது நண்பர்களின் வருமானத்தையும் அதிகரித்ததுதான் இந்த அரசு செய்த சாதனை" எனச் சாடியுள்ளார்.
தினசரி வருவாய் ரூ.150-க்கும் குறைவாகச் சம்பாதிப்பவரின் எண்ணிக்கை தற்போது 7.5 கோடியாக உள்ளது என கவலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உலக சிட்டுக்குருவி நாள்: குருவிக் கூண்டை பொருத்திய தமிழிசை!