அமராவதி: ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலுள்ள மாக்கினேனி பசவபுன்னையா விஞ்ஞான கேந்திரம் என்னும் கலாசார மையத்தில் ஆந்திரமாநில சிபிஎம் கட்சித் தலைவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில், ஆந்திர மாநில சிபிஎம் தலைவர்களான மாது, வெங்கடேஸ்வர ராவ், ரமாதேவி, சுப்பாராவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருப்பதி இடைத்தேர்தல், ஆந்திர மாநில சமூகச் சிக்கல்கள் குறித்து உரையாடியதாகவும், தலித்துகள் மீதான வன்கொடுமைகள், பாஜகவின் மதவெறி அரசியல் குறித்து உரையாடியதாகவும் தொல். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், போராட்டக்களத்திலும், தேர்தல் களத்திலும் இணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி இடைத்தேர்தலில் விசிக களம் இறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விசிக தனி சின்னத்தில் போட்டியிடும்: திருமாவளவன்!