டெல்லி: கர்ப்பமுற்ற 14 வயது சிறுமி உட்பட ஜார்க்கண்டைச்சேர்ந்த 13 சிறுமிகள் டெல்லியிலிருந்து மீட்கப்பட்டனர். அதில் 12 பேர் குண்தி மாவட்டத்தைச் சேர்ந்வர்கள்.
இதுகுறித்து ஒருங்கிணைந்த மறுவாழ்வு வள மைய(IRRC -Integrated Rehabilitation Resource Center) அலுவலர் நச்சிகெட்டா கூறுகையில், 'சமூக நலன்துறை, குழந்தைகள் பாதுகாப்புத் துறை, கடத்தல் தடுப்புப்பிரிவு ஆகியவை சேர்ந்து இந்த மீட்புப்பணியினை செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமிகள் ஜார்க்கண்டிற்குக்கொண்டுவரப்படவுள்ளனர். மேலும், அவர்களுக்கென மறுவாழ்வும் அளிக்கப்படவுள்ளது. இந்த சிறுமிகள் புரோக்கர்களால் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த வேலையை ஜார்க்கண்டில் தொடர்ந்து செய்து வரும் பல ஆசாமிகள் பதின் பருவ சிறுமிகளிடம், தான் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி கொடுப்பதாக பொய் சொல்லி, அவர்களை வீட்டு வேலைகளுக்காக பலபேரிடம் விற்று வருகின்றனர்’ என்றார்.
மேலும், மீட்கப்பட்ட இந்தக் குழந்தைகள் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தால் கண்காணிக்கப்படுமெனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.