ETV Bharat / bharat

ஐ.மு. கூட்டணி இப்போது இல்லை - மம்தா பரபரப்பு கருத்து

மும்பையில் சரத் பவாரை சந்தித்த மம்தா பானர்ஜி ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை என பரபரப்பு கூறியுள்ளார்.

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By

Published : Dec 1, 2021, 5:10 PM IST

Updated : Dec 1, 2021, 5:21 PM IST

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி இன்று மகாராஷ்டிரா மாநிலம் சென்றுள்ளார். மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை, அவரது இல்லதில் மம்தா சந்தித்தார்.

பாஜகவுக்கு எதிராக மாநிலக் கட்சிகளை மம்தா அணிதிரட்ட முயற்சி செய்துவருவதாகக் கூறப்படுகிறது. அதன் முக்கிய நகர்வாகவே மம்தா தற்போது சரத் பவாரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, "நாட்டில் தற்போது நிலவிவரும் பாசிச சூழலை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து மாற்று திட்டத்தை உருவாக்க வேண்டும்.

மூத்த தலைவரான சரத் பவாரை சந்தித்து அரசியல் நகர்வுகள் குறித்து பேசினேன். சரத் பவார் கூறியவற்றை நான் ஏற்கிறேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற ஒன்று தற்போது இல்லை" எனக் கூறினார்.

சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சரத் பவார், இன்று மம்தாவுடன் நீண்ட ஆலோசனை மேற்கொண்டோம். நாட்டின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு ஒரே எண்ணம் கொண்ட சக்திகள் தேசிய அளவில் ஒன்றிணைய வேண்டும் என மம்தா கருதுகிறார்.

பலம்வாய்ந்த மாற்று தலைமையை நாம் உருவாக்க வேண்டும். எங்கள் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது என பவார் கூறினார்.

இதையும் படிங்க: தனிநபரின் அனுமதியில்லாமல் புகைப்படம் பயன்படுத்தக் கூடாது - ட்விட்டர் புது விதி

Last Updated : Dec 1, 2021, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.