பாகல்கோட் (கர்நாடகா): கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, இன்று பாகல்கோட்டில் சுற்றுப்பயணம் செய்தார். கடந்த ஜூலை 6 ஆம் தேதி, கெரூர் நகரில் நடந்த மோதலில் காயமடைந்தவர்களிடம் நலம் விசாரிக்க மருத்துவமனைக்குச் சென்ற சித்தராமையா, மருத்துவமனையில் இருந்து திரும்பும் வழியில், காயமடைந்தவர்களுக்கு அளித்த இழப்பீட்டுத் தொகையை சித்தராமையாவிடம் திருப்பிக் கொடுக்க உறவினர்கள் வந்தனர்.
இந்நிலையில், சித்தராமையா பணத்தை திரும்ப எடுக்காமல் வாகனத்தில் செல்ல முயன்றார். அப்போது எஸ்கார்ட் வாகனம் மீது முஸ்லீம் பெண் ஒருவர் 2 லட்சம் ரூபாயை வீசி, தனது கோபத்தை வெளிப்படுத்தினார். மேலும், "அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டு கேட்க வருவார்கள். பிறகு எங்களின் எந்த பிரச்சனையிலும் கவனம் செலுத்துவதில்லை. இந்து, முஸ்லீம் என அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்.
ஆனால் நாம் எந்த தவறும் செய்யாவிட்டாலும் சரி. காரணமே இல்லாமல் எங்கள் மக்களை தாக்கினார்கள். இன்று இழப்பீடு தருவார்கள். ஆனால் காயம்பட்டவர்கள் ஒரு வருடம் படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டும். எங்கள் பிரச்சனைகளை தினமும் கேட்பது யார்? எங்கள் பிரச்சனைக்கு பணம் தீர்வல்ல. பிச்சை எடுத்து குடும்பத்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். இது போன்ற சம்பவங்கள் இந்துக்களாக இருந்தாலும் சரி, முஸ்லீம்களாக இருந்தாலும் சரி யாருக்கும் நடக்கக்கூடாது" என அப்பெண் கூறினார்.
இதையும் படிங்க: ஹிஜாப் விவகாரம்: கர்நாடக நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - 9 பேர் முன்ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!