தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆண்டுதோறும் சதர் விழா நடத்தப்படுவது வழக்கம். இதில் விலையுயர்ந்து எருமைகள் பங்கேற்கும். இந்த விழா இந்தாண்டும் சிறப்பாக நடத்தப்பட்டது. இதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனிடையே ஹைதராபாத்தைச் சேர்ந்த மது யாதவ் தலைமையில், நகராட்சி மைதானத்தில் உழவர் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து சதர் விழாவில் பங்கேற்பதற்காக மது யாதவ் எருமை மாடுகளை வாங்கி அவரது பால் பண்ணையில் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இந்த கொண்டாட்டத்திற்கான சிறப்பாக ஹரியானாவின் எருமை ராஜு சதர் கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளது.
மேலும் மற்றொரு எருமையான கருடன் சிறப்பு கவனம் பெற்றது. 20 நாட்களுக்கு முன்பு ஹைமத் ஆலம் கானிடம் இருந்து 35 கோடி ரூபாய் கொடுத்து இந்த கருடன் எருமையை வாங்கியதாகவும், தற்போது ஹைதராபாத்திற்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
எருமைகளின் விந்தணுவின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கருடன் எருமையின் விந்தின் ஒரு துளி 1,200 முதல் 1,500 வரை விற்பனை செய்யப்படுவதாக மது கூறினார். மாநிலத்தில் முர்ரா இன எருமைகளின் வளர்ச்சியை அதிகரிக்க உழைத்து வருவதாக மது தெரிவித்தார்.
மேலும் இந்த எருமைகளுக்கு உணவாகப் பால், பிஸ்தா, பாதாம், முந்திரி, ஆப்பிள், கோழி முட்டை, கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு, வெந்தய விதைகள், வேர்க்கடலை, குஜார், பீட்ரூட் ஆகியவை வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் சூரிய கிரகணம்... வெறும் கண்களால் பார்க்கக் கூடாது... மக்களே எச்சரிக்கை...