புதுடெல்லி: நேற்று முன்தினம் (ஜூலை 25) நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. குறிப்பாக காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் 4 பேரும் விலைவாசி உயர்வை கண்டிக்கும் வகையிலான பதாகைகளை வைத்து எதிர்ப்பை தெரிவித்ததால், நான்கு எம்பிக்களையும் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
நேற்று (ஜூலை 26) மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதால் திமுக மாநிலங்களவை உறுப்பினர்களான கனிமொழி என்.வி.என்.சோமு, சண்முகம், அப்துல்லா, என்.ஆர்.இளங்கோ, கல்யாணசுந்தரம் மற்றும் கிரிராஜன் ஆகியோர் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களான சுஷ்மிதா சென், மவுஷம் நூர், ஷாந்தா சேத்ரி, அபி ரஞ்சன் பிஷ்வர், நாதிமுல் ஹகியூ, டாக்டர் சாந்தனு சென் மற்றும் டோலா சென் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி.க்களான லிங்கையா யாதவ், ரவிஹந்திரா வாதிராஜூ மற்றும் தாமோதர் ராவ் திவாகொண்டா ஆகியோர் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
-
Delhi | Four Congress MPs who are suspended from the Monsoon session for ruckus in the Lok Sabha protest at Gate 1 of the Parliament pic.twitter.com/xRsYUcO1vJ
— ANI (@ANI) July 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delhi | Four Congress MPs who are suspended from the Monsoon session for ruckus in the Lok Sabha protest at Gate 1 of the Parliament pic.twitter.com/xRsYUcO1vJ
— ANI (@ANI) July 27, 2022Delhi | Four Congress MPs who are suspended from the Monsoon session for ruckus in the Lok Sabha protest at Gate 1 of the Parliament pic.twitter.com/xRsYUcO1vJ
— ANI (@ANI) July 27, 2022
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.க்களான ஏ.ஏ.ரஹீம், சிவதாசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யான சந்தோஷ் குமார் ஆகியோர் உட்பட 19 பேர் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
-
Delhi | Congress MPs protest in front of the Mahatma Gandhi statue on the suspension of opposition MPs from Parliament pic.twitter.com/d2aZCnCIXJ
— ANI (@ANI) July 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delhi | Congress MPs protest in front of the Mahatma Gandhi statue on the suspension of opposition MPs from Parliament pic.twitter.com/d2aZCnCIXJ
— ANI (@ANI) July 27, 2022Delhi | Congress MPs protest in front of the Mahatma Gandhi statue on the suspension of opposition MPs from Parliament pic.twitter.com/d2aZCnCIXJ
— ANI (@ANI) July 27, 2022
இந்நிலையில் இன்று இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்களின் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் காந்தி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட 4 பேர் சஸ்பெண்ட்