ETV Bharat / bharat

காதலுக்காக சினிமா பாணியில் கொலை செய்த 65 வயது முதியவர் - அதிர்ச்சி சம்பவம்! - தன் அடையாளத்தை அழிக்க கொலை செய்த முதியவர்

மகாராஷ்டிராவில் காதலுக்காக 65 வயது முதியவர் ஒருவர், சினிமா பாணியில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதியவரை போலீசார் கைது செய்தனர்.

old
old
author img

By

Published : Dec 28, 2022, 8:11 PM IST

புனே: மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள சார்ஹோலி பகுதியைச் சேர்ந்த கெர்பா தோர்வ் (65) என்ற முதியவர், ஒரு பெண்மணியை காதலித்து வந்ததாக தெரிகிறது. அவர் அந்த பெண்ணுடன் ஊரைவிட்டு ஓடிப்போய் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நினைத்துள்ளார். அதற்காக சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஒரு சம்பவத்தை செய்துள்ளார்.

கெர்பா, தான் இறந்து போனதாக சித்தரிக்க கொலை செய்துள்ளார். தன்னுடன் நட்பாகப் பழகி வந்த ரவீந்திர பீமாஜி கெனந்த் (48) என்பவரை, தனது தோட்டத்தில் வைத்து கழுத்தை அறுத்தை கொலை செய்துள்ளார். பிறகு தலையை தனியாக துண்டித்துவிட்டு, சடலத்திற்கு தனது உடையை அணிவித்துள்ளார்.

பிறகு தலை இல்லாத அந்த உடலை, ரோடு ரோலரை வைத்து மோதி, அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்துள்ளார். இந்த உடலை பார்த்த கெர்பாவின் உறவினர்கள், அவர்தான் இறந்துவிட்டார் என நம்பிவிட்டனர். இதையடுத்து கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட தடயங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு, முதியவர் ஊரைவிட்டு தப்பியோடிவிட்டார். இந்த கொலை சம்பவம் கடந்த 16ஆம் தேதி நடந்துள்ளது.

இதனிடையே தந்தையைக் காணவில்லை என ரவீந்திர பீமாஜி கெனந்த்தின் மகன் நிகில் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சடலம் முதியவர் கெர்பாவுடையது அல்ல என்பதை உறுதி செய்த போலீசார், கெர்பாவை தேடி வந்தனர்.

இதையடுத்து புனே அருகே மற்றொரு கிராமத்தில் கெர்பாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மொத்த சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்தது. காதலுக்காக 65 வயது முதியவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கொள்ளையடித்த பணத்தில் கோவாவில் குதூகலம்.. கும்பல் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.