ETV Bharat / bharat

கர்நாடக - மகாராஷ்டிர எல்லைப் பிரச்னை: பசவராஜ் பொம்மையும் அஜித் பவாரும் கருத்து மோதல்! - we are thinking how to take it

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பகுதிகளில் கன்னட மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியை கர்நாடக அரசின் எல்லைக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இது அரசியல் அரங்கில் சூட்டைக்கிளப்பியுள்ளது.

கர்நாடகா - மகாராஷ்டீரா எல்லை பிரச்சனை!- இரு மாநில முதல்வர்கள் கருத்து மோதல்!

author img

By

Published : May 2, 2022, 3:59 PM IST

கர்நாடகா: மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் நேற்று 'மகாராஷ்டிர விழாவில்’ பேசிய போது கர்நாடக எல்லைக்குள் இருக்கும் கிராமங்களான பெலகாம், காரார், நிப்பான் ஆகியப் பகுதிகளில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வசிப்பதால் அந்த கிராமங்களை மகாராஷ்டிர அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர இருப்பதாகக் கூறினார். இது கர்நாடகா வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இதற்குப் பதிலளிக்கும் விதமாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மகாராஷ்டிராவில் உள்ள கன்னடம் பேசும் மக்கள் அதிகமுள்ள கிராமங்களைக் கர்நாடக அரசின்கீழ் கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாகவும், மேலும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

மகாராஷ்டிர அரசு மீதான மக்கள் நம்பிக்கை குறையும் போதும், பிரச்னைகள் உருவாகும் போதும் அங்குள்ள ஆட்சியாளர்கள் கர்நாடகா குறித்த எல்லைப் பிரச்சனையை வெளிகொண்டு வந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் செயல்படுகின்றனர் என பொம்மை குற்றம்சாட்டியுள்ளார். அரசியலில் தாக்குப்பிடிப்பதற்காக இந்த உத்தியை கையாளுகின்றனர் எனவும் கூறினார்.

இதையும் படிங்க:தரமற்ற ஷவர்மாவால் 16 வயது மாணவி உயிரிழப்பு - மருத்துவமனையில் 18 மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.