ETV Bharat / bharat

மீனவர் வலையில் சிக்கிய ராட்ஷத 'டெலியா போலா' மீன் - ரூ.13 லட்சத்திற்கு ஏலம்! - ‘டெலியா போலா

மேற்கு வங்க மாநிலம், கிழக்கு மிட்னாபூரில் உள்ள திகா டவுனில் நேற்று (ஜூன் 26) சுமார் 55 கிலோ எடையுள்ள பிரமாண்டமான ‘டெலியா போலா’ மீன் ரூ.13 லட்சத்துக்கு விற்பனையானது.

டெலியா போலா
டெலியா போலா
author img

By

Published : Jun 27, 2022, 10:25 PM IST

மேற்கு வங்க மாநிலத்தில் திகா எனும் நகரம் உள்ளது. இங்கு வழக்கமாக நடைபெறும் மீன் சந்தையில் ஷிபாஜி கபீர் என்பவர் ராட்ஷத பெண்'டெலியா போலா' மீனை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தார். அது ஏலம் விடப்பட்ட 3 மணி நேரத்துக்குப்பின், கிலோ 26 ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் சுமார் 13 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த மீன் உயிர் காக்கும் மருந்துகளை தயாரிக்க உதவும் என்பதால் இது எப்போதும் நல்ல விலைக்கு போகும் என மீனவர்கள் கூறுகின்றனர். ’டெலியா போலா’ மீனை வெளிநாட்டு நிறுவனம் ஒன்று வாங்கியதாக வியாபாரி கார்த்திக் பெரா கூறினார். சில தினங்களுக்கு முன் கிடைத்த ஆண் டெலியா போலா மீன் 9 லட்சம் ரூபாய்க்கு விலை போனதாக குறிப்பிட்டார்.

இது குறித்து திகா மீனவர் மற்றும் மீன் வியாபாரிகள் சங்க உறுப்பினர் நபகுமார் பைரா கூறுகையில், 'ராட்ஷத டெலியா போலா மீன் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை இங்கே கடற்கரைப் பகுதிகளில் வரும். அப்படி வரும்போது அதை பிடிக்கும் மீனவர் ஒரே நாளில் பணக்காரர் ஆகிறார்' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: 13 ஆண்டுகால கடின உழைப்பு - கணித ஆசிரியர் தயாரித்த சூப்பர் சோலார் கார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.