உத்தரப்பிரதேசம்: ''உத்தரப்பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடந்துமுடிந்துள்ளது.
EVM போன்ற வாக்குப்பதிவு இயந்திரக்கோளாறுகள் குறித்த அனைத்துப் புகார்களும் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டுள்ளது" என அந்த மாநிலத்தின் தலைமை தேர்தல் அலுவலர் அஜய் குமார் சுக்லா தெரிவித்துள்ளார்.
அதிகபட்ச வாக்குகள் பதிவான மாவட்டங்களாக ஷாம்லி (69.42%), மதுரா மற்றும் முஜபர்நகர் ஆகிய மாவட்டங்களில் 65.34%, 63.84% எனும் கணக்கில் வாக்குகள் பதிவாகியுள்ளன.
கவுதம புத்தா நகரில் 56.73% வாக்குகள் பதிவானது.
இதைத்தவிர குறைந்தபட்ச வாக்குப்பதிவு விழுக்காடாக காஸியாபாத்(54.77%), மீரட்(60.91%) மற்றும் ஆக்ரா(60.33%) போன்ற மாவட்டங்கள் பெற்றுள்ளன.
நேற்று(பிப் 10) பகல் 7 மணி முதல் வாக்குப்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த முதல்கட்ட வாக்குப்பதிவு எந்தவித இடையூறுகளின்றி காவல் துறையின் சிறப்பான செயல்பாட்டால் தேர்தல் நடத்தப்பட்ட 58 தொகுதிகளிலும் எந்தவித பிரச்னையின்றி அமைதியாக நடைபெற்றது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவான 55 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.