ETV Bharat / bharat

கைக்குழந்தையை கொலை செய்த தந்தை தற்கொலை! - குற்றச் செய்திகள்

பிறந்து 7 மாதங்களே ஆன கைக்குழந்தையை வெட்டிக் கொலை செய்த தந்தை தானும் தற்கொலை செய்துகொண்டார்.

கைக்குழந்தையை வெட்டி கொலை செய்த தந்தை தற்கொலை!

author img

By

Published : Sep 24, 2021, 6:36 PM IST

கண்ணூர்: கேரளாவைச் சேர்ந்தவர் சதீஷ் (38). இவரது மனைவி அஞ்சு. இந்த தம்பதிக்கு பிறந்து 7 மாதங்களே ஆன தியான் தேவ் எனும் கைக்குழந்தை இருந்தான்.

இந்நிலையில் இன்று (செப்.24) காலை 8 மணியளவில் சதீஷ் தனது மனைவி, கைக்குழந்தை ஆகியோரை வீட்டில் இருந்த சமையலறைக் கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார்.

அதிக ரத்தப்போக்கால் குழந்தை உயிரிழப்பு

தாக்குதலுக்கு முன்னதாக சதீஷ், தனது தாய் தேவதியை ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளார். அப்போது தேவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அனைவரும் சதீஷின் வீட்டுக்குள் புகுந்தனர்.

தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷும் தற்கொலைக்கு முயன்று, படுகாயமடைந்து இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இருப்பினும் தாக்குதலில் காயமடைந்த கைக்குழந்தை தியான் தேவ், அதிக இரத்தப்போக்கு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான்

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் குழந்தையின் தாய்

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அஞ்சு தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருவதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தினை கண்ணூர் நகர காவல் ஆணையர் ஆர்.இளங்கோ நேரில் சென்று பார்வையிட்டார். குற்றத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: குஜராத்தில் சிலிண்டர் வெடித்து தந்தை மகன் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.