ETV Bharat / bharat

வீடு கட்ட உதவுங்கள் - கன்னடர்களிடம் ஆஸ்கர் புகழ் பொம்மன் - பெள்ளி தம்பதி வேண்டுகோள்! - The Elephant Whisperers movie

ஆஸ்கர் விருது பெற்ற The Elephant Whisperers ஆவணப் படத்தில் இடம் பெற்றதன் மூலம், பெரும் புகழை மட்டுமல்லாது, அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்து உள்ள பொம்மன், பெள்ளி தம்பதிக்கு, சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

The elephant whisperers belli- bomman couple appealed to kannadigas to help them build house
வீடு கட்ட உதவுங்கள் - கன்னடர்களிடம் ஆஸ்கர் புகழ் பொம்மன் - பெள்ளி தம்பதி வேண்டுகோள்!
author img

By

Published : Jun 17, 2023, 12:23 PM IST

துமாகூர் (கர்நாடகா): The Elephant Whisperers என்ற ஆவணப்படத்தில் இடம் பெற்றதன் மூலம், ஆஸ்கர் விருது பெற்ற நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதி, சொந்த வீடு இல்லாமல், அவதிப்பட்டு வருகின்றனர்.

The Elephant Whisperers என்ற குறும்படம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து இருந்த நிலையில், இந்தப் படம், திரை உலகின் மிக உயரிய விருதான, ஆஸ்கர் விருதை, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் வென்றது. இந்தப் படத்தில், தமிழ்நாட்டின் முதுமலை பகுதியைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி நடித்திருந்ததன் மூலம், இந்தியா முழுவதும் ஒரே நாளில், இந்த தம்பதி, பிரபலம் ஆயினர். பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்த தம்பதியை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சோகம்: பொம்மன் - பெள்ளி தம்பதி, ஆஸ்கர் விருது வென்றதன் மூலம், அவர்கள் உலகப்புகழ் பெற்று உள்ள நிலையிலும், அவர்கள் தங்குவதற்கு என்று ஒரு வீடு இல்லை. எனவும், தங்களின் அவல நிலையைக் கேட்க யாரும் இங்கு இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

இவர்களின் பங்களிப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், கர்நாடக மாநிலத்தின், தும்கூர் மாவட்டம் ஷிரா பகுதியில் உள்ள வர்தமான் பள்ளி நிர்வாகம் முன்வந்தது. சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுமை அம்சமாக, பொம்மன் - பெள்ளி தம்பதி உடன், மாணவர்கள் கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் நிகழ்வின் போது, பேசிய பொம்மன், தாங்கள் வீடு இன்றி கஷ்டப்படுவதாகவும், தங்களுக்கு வீடு கட்ட உதவுமாறும் வேண்டுகோள் வைத்தார்.

The Elephant Whisperers குறும்படம் ஆஸ்கர் விருதை வென்ற நிலையில், அவர்களை கவுரவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு சார்பில், முதலமைச்சர் ஸ்டாலின், பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு, ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். அதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, அவர்களை சந்தித்து, பல்வேறு உத்தரவாதங்களை வழங்கி இருந்தார். ஆனால், அவைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஷிரா பகுதி மக்கள், அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்து உள்ளனர். முதுமலை பகுதியில், அவர்களுக்கு வீடு கட்டித் தரும் வகையில் தேவையான உதவிகளை செய்து தர உள்ளதாக, வர்தமான் பள்ளி நிர்வாகி சஞ்சய், உறுதி அளித்து உள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு, வீடு இல்லை என்ற அவர்களின் வலியை உணர்ந்தவர்கள் பல வழிகளிலும் உதவிக்கரம் நீட்ட முன்வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம் தான். ரகு என்ற அழகிய யானையைக் காப்பாற்றி மனிதத்திற்கு பொருள் தந்த இந்த தம்பதி அன்று உலகத்தின் கவனத்தை ஈர்த்து, இன்று உதவிக்காக கதறிக் கொண்டிருப்பது உண்மையில் நகைப்புக்குரியது மட்டும் அல்ல, பெரும் சோகத்திற்கு உரியதும் தான்!

இதையும் படிங்க: உடற்கல்வி வகுப்பை மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்காதீர்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.