ETV Bharat / bharat

நெடுஞ்சாலை ஓடுபாதையில் போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகை...

author img

By

Published : Dec 29, 2022, 10:34 PM IST

நெடுஞ்சாலை ஓடுபாதையில் போர் விமானங்களைத் தரையிறக்கும் ஒத்திகை, தென் இந்தியாவில் முதல் முறையாக ஆந்திராவில் சோதனை நடத்தப்பட்டதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போர் விமானம்
போர் விமானம்

நெடுஞ்சாலை ஓடுபாதையில் போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகை...

பாப்ட்லா: ஆந்திர பிரதேச மாநிலம் பாப்ட்லா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் விமானங்கள் தரையிறங்க ஏதுவாக ஓடுதள பாதை அமைக்கப்பட்டு உள்ளது. பிச்சிகலகுடிபடு கிராமத்தை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஓடுதள பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில், ஏறத்தாழ 4.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு விமான அவசரகால தரையிறக்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓடுதள பாதையில் இந்திய விமானப் படையின் விமானங்களைத் தரையிறக்கும் ஒத்திகை நடைபெற்றது.

இந்திய விமானப் படையின் சுகாய் போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டன. தேஜஸ் இலகு ரக போர் விமானம், இரு சுகாய் SU ரக போர் விமானங்கள், இந்திய ராணுவத்தின் AN-32 போக்குவரத்து விமானங்கள் ஓடுதள பாதையில் தரையிறக்கி ஒத்திகை பார்க்கும் பணிகள் நடைபெற்றன.

இந்த ஒத்திகையின் போது பாதையில் இருந்து 100 மீட்டர் உயரத்தில் பறந்த விமானங்கள் பறந்தன. இதுகுறித்து இந்திய விமானப் படை அதிகாரிகள் கூறுகையில், ஓடுதள பாதை பணிகள் நிலுவையில் இருப்பதாகவும், போர் விமான தரையிறக்கும் போது பொது மக்கள் நுழையாமல் தடுக்க சாலையில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இயற்கை சீற்றம், போர் உள்ளிட்ட அவசரகால சூழ்நிலைகளின் போது விமானங்கள் தரையிறங்க ஓடுதளபாதை உதவியாக இருக்கும் என்றார். தென் இந்தியாவில் முதல் முறையாக ஆந்திராவில் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சூதாட்ட விடுதியில் தீ விபத்து : 19 பேர் உடல் கருகி பலியான சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.