ETV Bharat / bharat

"தெலங்கானாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்"- திரிவேந்திர சிங் ராவத்!

author img

By

Published : Jul 6, 2022, 5:21 PM IST

தெலங்கானாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

Exclusive
Exclusive

ஹைதராபாத்: பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், பாஜக தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2, 3ஆம் தேதிகளில் நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பாஜக தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், ஹைதராபாத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற ராமோஜி ஃபிலிம் சிட்டியை பார்வையிட்டார். பின்னர் ஈடிவி செய்தியாளர்களுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அந்த உரையாடலை காண்போம்...

கேள்வி: லஞ்சம் வாங்கியதாக பத்திரிகையாளர் உமேஷ் ஷர்மா தொடர்ந்த வழக்கிலிருந்து ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உங்களது பெயரை நீக்கியுள்ளது. அதைப் பற்றி கூறுங்கள்...

பதில்: அது புனையப்பட்ட ஒரு பொய் வழக்கு. பத்திரிகையாளர் உமேஷ் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். முதலில் அவர் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் ஆதாரங்களை கேட்டதும், மனுக்களை வாபஸ் பெற்றார். பிறகுதான் வழக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. யாரோ ஒருவர் எனக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எனது பெயரை அதிலிருந்து நீக்கிவிட்டது.

கேள்வி: பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அனுபவம் எப்படி இருந்தது?

பதில்: தேசிய செயற்குழு கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடும்படி மூத்த தலைவர்கள் அறிவுறுத்தினர். இந்த செயற்குழு கூட்டம் குறித்து தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் என்ன வேண்டுமானாலும் கூறலாம், கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், இம்முறை தெலங்கானாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

கேள்வி: பாஜக நாட்டின் திறன் வளர்ப்பு குறித்து பேசி வருகிறது. அதேநேரம் முதலமைச்சர் சந்திர சேகர ராவ், அவரது ஹைதராபாத் நகரம்தான் திறன் வளர்ப்பில் முன்னணியில் இருப்பதாக கூறுகிறார். மேலும், ஏற்கனவே உள்ள திட்டங்களின் பெயர்களையும், நகரங்களின் பெயர்களையும்தான் பாஜக மாற்றிக் கொண்டிருக்கிறது என தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி குற்றம் சாட்டுகிறது, இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

பதில்: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மத்திய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களின் பெயர்களை மாற்றுகிறது, அது சரியல்ல. அது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஆனால், நகரங்களின் பெயர்களை மாற்றுவது முற்றிலும் மாறுபட்ட விஷயம். அதற்கு வரலாற்று காரணம் உள்ளது. படையெடுப்புகளின் போது வழிபாட்டுத் தலங்கள் கொள்ளையடிக்கப்பட்டு அவற்றின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டன, அவற்றை மீட்கும் முயற்சியாகத்தான் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

கேள்வி: மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்ராவில் பாஜகதான் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தி, ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுகுறித்து கூறுங்கள்.

ராமோஜி ஃபிளிம் சிட்டியில் திரிவேந்திர சிங் ராவத்...
ராமோஜி ஃபிலிம் சிட்டியில் திரிவேந்திர சிங் ராவத்...

பதில்: குறிப்பிட்ட சிலரால் அவர்களது கட்சியை காப்பாற்றி வைத்துக் கொள்ள முடியவில்லை. நாங்கள் எந்த கட்சியையும் உடைக்கவில்லை. மகாராஷ்டிராவில் பாஜகவின் முதலமைச்சர் இல்லை. உத்தவ் தாக்கரேவால் சிவசேனாவை கையாள முடியவில்லை என நேரடியான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் அதிருப்தியடைந்தே ஷிண்டே அணி அதிலிருந்து பிரிந்தது. உத்தவ் தாக்கரே, இந்துத்துவ கொள்கையிலிருந்து விலகிவிட்டார். மாறாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை திருப்திபடுத்தும் கொள்கையை பின்பற்றினார். இந்த சூழலில் மகாராஷ்டி்ராவை பாஜக காப்பாற்றியுள்ளது.

கேள்வி: பாஜக மாநிலத்திற்கு ஏற்ப கொள்கைகளில் சமரசம் செய்து கொள்கிறது- உத்தரகாண்டிலும் அரசியல் மாற்றத்துக்கான காரணிகள் தென்படுகின்றன. நீங்கள் ஹரிஷ் ராவத்துடன் புகைப்படத்தில் காணப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன?

பதில்: உத்தரகாண்ட்டில் இரு கட்சிகளின் தலைவர்களும் உள்ளனர். காங்கிரஸ் அல்லது பாஜக தலைவர்கள், யாராக இருந்தாலும் இன்முகத்தோடு பேசிக் கொள்வார்கள். இதுபோன்ற ஒரு சூழல் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

கேள்வி: பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் உத்தரகாண்ட் மாநிலம் வளர்ச்சியில் முன்னிலையில் இருக்கும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், முன்னாள் பாஜக முதல்வர் வகுத்த கொள்கைகள் இதற்கு நேர் மாறாக இருந்தன, குறிப்பாக சார்தாம் தேவசம் போர்டு கலைப்பு விவகாரத்தில். இப்படி இருக்கையில் மாநிலம் எப்படி வளர்ச்சி அடையும்?

பதில்: பல நேரங்களில் அரசாங்கம் எடுக்கும் முடிவை, மக்களிடம் விளக்க முடிவது இல்லை. தற்போது தேவசம் போர்டு தேவை என்பதை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். இந்த விவகாரத்தில் விவாதம் தேவை. ஆனால், மக்களின் நலன்கள் மற்றும் உரிமைகள் எப்போதும் குறைமதிப்பீடு செய்யப்படாது என்பதை புரிய வைக்க நாங்கள் சிரமப்படுகிறோம்.

கேள்வி: நுபுர் சர்மா வழக்கை நாட்டு மக்களுக்கு பாஜகவால் ஏன் விளக்க முடியவில்லை?

பதில்: ஒட்டுமொத்த நாடும் நுபுர் சர்மா வழக்கை புரிந்து வைத்துள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்புகள் வருவதை பார்க்கையில், மக்கள் இந்த பிரச்சனையை தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. நுபுர் சர்மா கூறியது சம்மந்தப்பட்ட நபருக்கு புரியவில்லை, ஆனால் நாட்டு மக்களுக்கு நன்றாக புரிந்திருக்கிறது.

கேள்வி: நுபுர் சர்மா வழக்கில் பாஜகவின் நிலைப்பாடு என்ன?

பதில்: ஏதோ ஒரு விஷயத்தால் ஒருவரது உணர்வுகள் புண்படும் என்றால், அதைப்பற்றி பேசக்கூடாது என்பதையே பாஜக நம்புகிறது.

கேள்வி: டெல்லி மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்துடன் பாஜக நெருங்கிய உறவில் செயல்படுகிறதா? அல்லது ஏதேனும் எதிர்ப்பு இருந்ததா?

பதில்: உத்தரகாண்ட் அரசு புஷ்கர் சிங் தாமி தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இனி வரும் காலத்திலும் சிறப்பாக செயல்படும்.

கேள்வி: உத்தரகாண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி 10 ஆண்டுகள் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதுகுறித்து கூறுங்கள்.

பதில்: அடுத்த பத்து ஆண்டுகள் உத்தரகாண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்கானது என பிரதமர் கூறியுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு 2001-ல், நரேந்திர மோடி உத்தரகாண்ட் மாநில பொறுப்பாளராக இருந்தபோது, அனைத்து வானிலைகளுக்கும் ஏற்ற சாலைகள், ரயில் மற்றும் விமான சேவைகளை உருவாக்குவது பற்றி கூறியிருந்தார். இப்போது அதை செயல்படுத்த முனைந்துள்ளார். பிரதமர் என்ன சொன்னாலும் அதை செயல்படுத்துகிறார். அதனால், அவர் தனது இலக்கை நிச்சயம் அடைவார் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இதையும் படிங்க: உதய்பூர் டெய்லர் கொலை வழக்கு: ஹைதராபாத்தில் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.