ஹைதராபாத்: 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தெலங்கானா தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழா ஜனவரி இரண்டாம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று தாஜ் மஹால் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
அன்றைய நாளில் குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்நிகழ்ச்சிகள் மாலை நான்கு மணியளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விழாவின் நிறைவாக அனைவருக்கும் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சங்கம் தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கமே தொன்மைவாய்ந்த மொழியான தமிழ் மொழியை அனைவரும் கற்பதற்காக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுக ஆட்சிக்காலம் சிறுபான்மையினரின் ஏற்றத்திற்கான காலம் - மு.க.ஸ்டாலின்