ஹைதாராபாத்: தெலங்கானா மாநிலத்தில் சித்திப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.
கடந்த ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற இந்த விழாவின்போது சித்திப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வெங்கட்ராம் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் காலில் விழுந்துள்ளார்.
அவரின் இந்த செயல் வீடியோவாக இணையத்தில் வைரலானது. மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் காலில் விழுவதா என சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்னர்.
இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர், "மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபடும் முதலமைச்சர் என்பதால் காலில் விழுந்தேன். அவர் எனக்கு ஓர் தந்தையை போன்றவர்.
சுபகாரியங்கள் நடக்கும் போது பெரியவர்களின் ஆசியைப் பெறுவது தெலங்கானா மாநிலத்தின் பாரம்பரியமாகும். தந்தையர் தினத்தில் முதலமைச்சரின் ஆசி பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க; 2 வயது குழந்தையின் அசத்தல் நினைவாற்றல்!