ஹைதராபாத்: தெலங்கானா மாநில ஐடி துறை அமைச்சர் கே.டி ராமராவ் நேற்று (மே 8) ட்விட்டர் பயனாளர்களிடையே உரையாடினார். ASKKTR என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி பயனாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார். மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தி வருவது குறித்தும் மாநில அரசு வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. சில கேள்விகளுக்கு நகைச்சுவையாக அமைச்சர் பதிலளித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 'மோடி இருந்தால் எல்லாம் சாத்தியம்' என்று கூறுயுள்ளார். எல்ஐசி நிறுவனத்தை மத்திய அரசு விற்பது குறித்து கேட்டதற்கு பதிலளித்த அவர், பிஜேபி மக்கள் சொத்தை விற்கிறது. பொது துறை நிறுவனத்தை விற்கிறது என்றார்.
மற்றொரு பயனாளர் கூறுகையில், தெலங்கானாவில் தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டலம் (ஐடிஐஆர்) திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஐஐடி , ஐஐஎஸ்இஆர், என்ஐடி என தேசிய கல்வி நிறுவனங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், 8 ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். மத்திய அரசிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பது வீண் என்றார்.
அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் டிஆர்எஸ் கட்சியின் வெற்றி வியூகம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "மக்களின் ஆசியுடன் நாங்கள் வெற்றி பெறுவோம், மக்களுக்கு தொடந்து நல்ல பணிகளை செய்வோம் என்றார்.
இதையும் படிங்க: தெலங்கானாவில் கோர லாரி விபத்து!- பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!